நாமலும் மன்னிப்பு கேட்கிறார்!
அரசியலில் ஒதுக்கப்பட்டுள்ள மகிந்த குடும்பமும் அதன் எடுபிடிகளும் மீண்டும் இனவாதத்தை கையில் எடுத்துள்ளனர்.
மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 பேரைக் கொன்ற விடுதலைப் புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது . குறிப்பாக மத்திய வங்கி மீது குண்டுவீசி 91 பேரைக் கொன்று 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்திற்கு காரணமான விடுதலைப் புலி உறுப்பினருக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்தகையநபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், எமது போர்வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக இருக்கிறார்கள் . இவர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என்றார்
Post a Comment