கருணாகரத்திற்கு சந்தேகமாம்!



தென்னிலங்கையில் சரத் வீரசேகர,உதய கம்மன்பில, விமல்வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்ததினையும் மாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை

அவர்கள் கூறிவரும்; அதே கருத்தினை அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது என்பது வேடிக்கையானது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கானது மாத்திரமல்ல முழு நாட்டுக்குமானது என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வடக்கை பிரதிநிதித்துவப்படும் தமிழ் கட்சிகள் அனைத்தும்; பங்கேற்றுள்ளதுடன், ஜே.வி.பியை தவிர்த்து நாட்டின் ஏனைய பிரதானக் கட்சிகளும்; பங்கேற்றுள்ளன.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல.

அது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்கள் என்றும், எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே வடக்கு - கிழக்கு பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறொன்றுமில்லை என்பது மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.அவ்வாறானதொரு சூழலில் வடக்கு - கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியுமா என்பது சந்தேகமே என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


No comments