வவுனியா:உச்சத்தில் குழு மோதல்கள்!

 


வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வாள் வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 24 வயதுடைய இளம் குடும்ப பெண் உயிரிழந்ததுடன், அங்கிருந்த 9 பேர் எரிகாயங்கள் மற்றும் வாள் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது. 

No comments