ரணில் போட்டி:சஜித் இல்லை -டலஸ் மட்டுமே! ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவது தொடர்பான உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அறிவிப்பு வெளியானதும், சில பெரிய மாற்றங்களை பொதுமக்கள் பார்க்கலாம். சஜித் பிரேமதாஸ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார்.

அதற்குப் பதிலாக கடந்த ஆண்டைப் போலவே டலஸ் அழகப்பெருமவுக்கு அவர் ஆதரவை வழங்குவார் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


No comments