மைத்திரியே சீனர்களை அழைத்து வந்தார்;ஈபிடிபி!மைத்திரியின நல்லாட்சி அரசிலேயே சீனர்களுக்கு கடலட்டை பண்ணைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டங்களை சேறுபூசும் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர் என  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான ஐயாத்துரை ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனநாதிபதி மைத்திரிபால சிறிசேன கடலட்டை பண்ணைகளால் பாரம்பரிய கடற்றொழில் முறைமை பாதிக்கப்படுவதாகவும் சிறு தொழிலாளர்களும் அவர்களது தொழிலை இழக்கும் நிலைமை உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அமைச்சர் டக்டளஸ் தேவானந்தா அவர்களின் திட்டமிடலின் பயனாக இன்று பல சிறு தொழில்களில் ஈடுபட்டவர்களில் கணிசமானவர்கள் கடலட்டை பண்ணை நடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

அதேவேளை கடலட்டைப் பண்ணைக்குரிய அனுமதிகள் அது தொடர்பான துறைசார் ஆட்சி நிறுவனங்களினால் ஆய்வக்கட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே அப்பகுதி சங்கங்களின் அங்கீகாரலங்களுடன் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்து கொள்ள விரும்பின் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக அத்தகவல்களை சுயாதீனமாக பெற்றுக்கொள்ள முடியும்

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்த காலப்பகுதியிலேயே யாழ் அரியாலைப் பகுதியில் கடலட்டை குஞ்சுகள் வளர்ப்பதற்கான அனுமதி சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் ரங்கேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


No comments