ஸ்பெயின் பாம்ப்லோனா காளை ஓட்டம் ஆரம்பம்: 1.7 மில்லியனுக்கு அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு


ஸ்பெயினில் வடக்கு நகரமான பாம்ப்லோனாவில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய சான் ஃபெர்மின் திருவிழாவின் முதலாம் நாள் காளை ஓட்டப் பந்தையத்தில் கீழே விழுந்தும் காளை மிதித்தும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

நகரின் ஒடுக்கமான கற்கலான வீதிகளில் காளைகளின் ஓட்டப் பந்தையம் நடைபெறுவது பிரபல நிகழ்வாக நடந்து வருகிறது. இக்காளைப் பந்தையப் போட்டி 1911 ஆண்டு முதல் இதுவரை 16 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள். கொரோனா தொற்றுக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்து கடந்த ஆண்டு இத்திருவிழா நடைபெற்றது. இதில் 1.7 மில்லியன் மக்கள் பம்ப்லோனாவுக்கு வருகை தந்தனர். இந்தாண்டு இதற்கு அதிகமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு மொத்த முன்பதிவுகளில் 70% அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்கள் இங்க வருகை தருகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ சுற்றுலா வழிகாட்டி குழுவான டெஸ்டினோ நவர்ரா கூறியுள்ளது.

No comments