தீவகத்தில் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்


யாழ்.தீவக வலய பாடசாலை ஒன்றில்  அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்று கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை தரம் 4ல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது பாடசாலை அதிபர் தாக்கியதாக பெற்றோரினால் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தீவக கோட்டக் கல்வி அதிகாரிகள் சிலர் பாடசாலையில் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. 

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments