பளையில் விபத்து ; முல்லைத்தீவு வாசி உயிரிழப்பு


கிளிநொச்ச்சி பளை பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை  இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். 

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த எம். குமரவேல் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். 

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை ஹயஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments