யாழில். போதைப்பொருளுடன் நால்வர் கைது


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் 200 மில்லிக் கிராம், கஞ்சா ஆயிரத்து 400 மில்லிக்கிராம் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த இருவர், புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த இருவர் என 20 முதல் 30 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments