சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சிறிய தந்தை பலாலி பொலிஸாரினால் கைது


சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமியின் வீட்டுக்கு இரவு வேளைகளில் செல்லும் , சிறுமியின் தந்தையின் சகோதரன் , சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலக சிறுவர் , பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , குறித்த சிறுமி தனக்கு நடக்கும் சம்பவங்கள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். 

அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு உத்தியோகஸ்தர்கள் அறிவித்ததை அடுத்து , சிறுமியின் சிறிய தந்தையை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments