கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!


கொழும்பில் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கான தடையினை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை 8.30 முதல் நாளை முற்பகல் 8.30 வரையில் குறித்த பகுதிகளில் ஆர்பாட்டங்களை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments