வவுனியாவில் உணவகம் தீக்கிரை


வவுனியா, நகரில் அமைந்துள்ள உணவமொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தினால், குறித்த உணவகம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

வவுனியா – கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு எதிரே இருந்த உணவகத்திலேயே இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில் திடீரென குறித்த உணவகத்தில் தீ பரவ ஆரம்பித்த நிலையில், குறித்த உணவகத்தில் பணியாற்றுபவரால் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தீயணைப்புப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், குறித்த உணவகமானது முற்றாக தீக்கிரையாகியுள்ளது. 

இந்த தீ விபத்தையடுத்து, ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு பிரிவினரால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பே இந்த தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments