அதிக சம்பளம் கொடுத்தால் இலஞ்சம் வாங்க மாட்டார்கள்


இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்கினால் அவர்கள் வேறு வழிகளில் இலஞ்சம் பெற மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்

 நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

“எம்மை நோக்கி எதிரணியினர் இன்று திருடர்கள் என்று கூறுகிறார்கள்.

2015 இலிருந்து 2020 வரை நாமும் அவர்களை பார்த்து திருடர்கள் என்றுதான் கூறினோம்.

இப்படி மாறி மாறி குறைக்கூறிக் கொண்டிருக்காமல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து திருடர்கள் நுழையாதவாறு ஏன் புதிய சட்டத்தை இயற்ற முடியாது?

குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனைக் கிடைக்க வழிவகை செய்ய எதிரணியினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்தோடு, இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கு சிறந்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்பதோடு, அவர்களுக்கான சம்பளமும் தாராளமாக வழங்க வேண்டும்.

ஏனெனில், பொலிஸ் அதிகாரியொருவரை ஆணைக்குழுவில் உறுப்பினராக நியமித்து, அவருக்கு பொலிஸாருக்கு வழங்கும் சம்பளத்தைதான் கொடுக்கிறார்கள்.

இதனால், இவர்களுக்கு ஏனையோர் வந்து பணம் கொடுக்கும் நிலைமை காணப்படுகிறது.

அனுபவமும், அறிவும் நிறைந்த சிறப்பான வல்லூனர்களை ஆணைக்குழுவுக்கு நியமிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments