ஆலய வழிபாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் - இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படுகாயம்


ஆலய வழிபாட்டிற்கு சென்று திரும்பியவர்களை வழி மறித்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் , இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் வெள்ளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு , உழவு இயந்திரத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்களை , வீதியில் தடைகளை ஏற்படுத்தி , உழவு இயந்திரத்தை வழிமறித்து பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. 

தாக்குதலில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் , தனிப்பட்ட காரணங்களால் தான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments