யாழில். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி மீது தாக்குதல்


யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் , மாணவி ஒருவரை ஆசியர் தாக்கியதில் மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவிக்கு நேற்றைய தினம் பாடசாலையில் வைத்து ஆசிரியர் ஒருவர் அடித்து கண்டித்துள்ளார்.

அதனால் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டு, கை தூக்க முடியாத அளவுக்கு மாணவி பாதிப்படைந்திருந்தார். அதனை அடுத்து , பாடசாலை நிர்வாகம் மாணவிக்கு அருகில் உள்ள மருந்தகம் ஒன்றில் நோவிற்கான எண்ணெய் ஒன்றினை வாங்கி பூசியுள்ளனர். 

மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் , கை நோ வினால் அவதிப்பட்ட நிலையில் , பெற்றோர் அது தொடர்பில் விசாரித்த போது , மாணவி பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் விபரித்துள்ளார். 

அதனை அடுத்து மாணவியை பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

No comments