அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை


பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் எவருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது மதம் அல்லது வேறு எந்த அமைப்பினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மதிப்பீட்டில் பயங்கரவாதம், தீவிரவாதம், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசேட கவனத் செலுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments