யாழில். 12 வயது சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த சிறிய தந்தை


12 வயதான சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த , தாயின் இரண்டாவது கணவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

வசாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் 12 வயதான மாணவன் வாய் மற்றும்  முகத்தில் நெருப்பினால் சுட்ட காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விசாரணைகளின் போது சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரே, சிறுவனுக்கு சூடு வைத்ததாகவும் , சூடு வைத்த காயங்கள் வெளியில் தெரியாதவாறு முக கவசம் அணிந்து சிறுவனை வெளியில் நடமாட விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் ,  சிறுவனுக்கு சூடு வைத்த நபரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments