திருமணமாகி 4 மாதங்கள் ; காய்ச்சலால் பெண் மரணம்


திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். 

மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments