கொக்கிளாய் புதைகுழி:சந்தேகம்!

இலங்கை படைகள் நிலைகொண்டிருந்த முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளினது என நம்பப்படும்; உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்ளும் வகையில் கனரக இயந்திரம் மூலம் நிலத்தை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வின் போது அப்பகுதிகளில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முனித எச்சங்கள் தொடர்பில் இலங்கை காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுயில் பெண் போராளிகளின் சீருடைகளை ஒத்த தடையங்கள் காணப்பட்டுள்ளன. பெண்களின் மேலாடை  பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன அதன்போது இனம் காணப்பட்டுள்ளன. 

எனினும் வரிசையில் புதைக்கப்பட்டுள்ள உடலங்கள் புதைகுழியில் காணப்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பின்னர் உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

No comments