தோற்கடிக்கப்பட்ட கோத்தாவின் விகாரையிலிருந்து பயணம்!
தென்னிலங்கை அரசியல்வாதிகளது உறுதி மொழிகளை தாண்டி வடக்கில் பௌத்தமயமாக்கல் முழு அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அவ்வகையில் தோற்கடிக்கப்பட்ட கோத்தபாய ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்திருந்த ருவன்வெலிசாயவிலிருந்து வவுனியா நோக்கிய புதிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் அனுராதபுரத்தின் ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரத்தில் உள்ள வராலற்றுச் சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28ஆம் திகதி வணக்கத்திற்குரிய கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரை, வவுனியா - கண்டி வீதியில் உள்ள விகாரையை இன்று வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்திருந்தது.
அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியை கையகப்படுத்தி மகிந்த ஆட்சிக்காலத்தில் சிங்கள குடியேற்றம் முன்னெடுக்கப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை பாதயாத்திரை சென்றடையவுள்ளது.
பாதயாத்திரையில் 50இற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள், பௌத்த புனித சின்னங்களை எடுத்து செல்வதுடன் அதனை அங்கு பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளார்.அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை போயா தினத்தன்று, விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
Post a Comment