கோழிச் சண்டை சூதாட்டம்: கோழிகளுடன் 7 பேர் கைது!


மட்டக்களப்பு - வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் கோழிச் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் நேற்று சனிக்கிழமை (17) கைது செய்யப்பட்டனர்.

கோழிச் சண்டை விளையாட்டு நடந்த பகுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் அங்கு கோழிச் சண்டையில் ஈடுபட்டிருந்த 6 பேரையும் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரையும் சேர்த்து 7 பேரை கைது செய்தனர்.

இதன்போது, 6 சண்டை கோழிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றையும் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்தது.

நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களை இன்று நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments