யேர்மனி எசன் கலவரத்தில் காவல்துறையினர் உட்பட பலர் காயம்!!


மேற்கு யேர்மனியில் உள்ள எசன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு நெரிசலான நேரத்தில்  நடைந்த சண்டை ஒன்றில் காவல்துறை அதிகாரிகள் உட்ப பலர் காயமடைந்தனர்.

இச்சண்டையில் உணவகம் ஒன்றின் முன் நடந்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

சம்பவ இடத்தில் காணப்பட்ட இரும்பு கம்பிகள் மற்றும் கத்திகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இச்சண்டையானது பல பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. ஏராளமான காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபபட்டு உலங்கு வானூர்தி மூலம் வானில் நிறுத்தப்பட்டு அதிகாலை வரை காவல்துறையின் கண்காணிப்பில் அப்பகுதி வைக்கப்பட்டிருந்தது.

சண்டையைத் தூண்டியதிற்கான காரணம் எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் குற்றச்செயல் இருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.

மோதலில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த மோதலுக்கு முன்னர் கடந்த வியாழக்கிழமை எசன் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில் உள்ள காஸ்ட்ரோப்-ரொக்செல் நகரில் நடந்த சண்டைக்கு தொடர்பு உள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கு இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பேஸ்பால் மட்டைகள், கத்திகள் மற்றும் பொல்லுகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

பலர் காயமடைந்துள்ளதுடன், 23 வயதுடைய இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வன்முறை ஏற்படாமல் தவிர்க்க எசென் மற்றும் காஸ்ட்ரோப்-ரொக்செல் ஆகிய இரண்டு நகரங்களிலிலும் தங்கள் கண்காணிப்பையும் விசாரணைகளையும் முடுக்கிவிட்டதாக காவல்துறையினர் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

No comments