பாரிசில் 4 மணி நேரம் நிறுத்தப்பட்ட நிலத்தடி தொடரூந்துகள்


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கணினியில் கோளாறினால் சமிக்ஞைகள் சரிவர வேலை செய்யாத காரணமாக நிலத்தடி தொடரூந்துகள்  நிலத்தடியில் இடைநித்தப்பட்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

நான்கு முக்கிய தடங்களில் பயணித்த நிலத்தடி தொடரூந்துகள் நேற்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை சிக்கிக்கொண்டன. இவை அனைத்தும் தனித்தனி சம்பவங்களாக ஏற்பட்டன.  

சித்தே Cité மெட்ரோ நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் ஒரு பெண் தனது பையை ஒரு கதவில் மாட்டி, அலாரம் எழுப்பினார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில ரயில்களை மீண்டும் இயக்க முடியவில்லை.

புதன்கிழமை மாலை, கணினி செயலிழந்ததால் இரவு 8:30-10 மணி முதல் முழு மெட்ரோ லைன் 13 சிக்கிக்கொண்டது. ஆனால் பயணிகள் நிலையங்களில் வெளியேற முடிந்தது. வடக்கு புறநகர் பகுதியான Seine-Saint-Denis இல் ஒரு பழுதடைந்த ரயில் RER (புறநகர் பயணிகள் தொடரூந்துகள்) B மற்றும் D வழித்தடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது.

நாங்கள் தாங்க முடியாத வெப்பத்தில் சிக்கிக்கொண்டோம்  என்று பயணிகள் கூறினர். இரண்டு நிலையங்களுக்கு இடையே நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவர் பல பயணிகளுடன் சேர்ந்து தண்டவாளப் பாதை ஊடாக நடந்து பயணிகள் வெளியேறினார்கள்.

No comments