மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் போப் பிரான்சிஸ்


வயிறு குடலிறக்கம் மற்றும் தழும்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு, போப் பிரான்சிஸ் இன்று வெள்ளிக்கிழமை காலை ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

86 வயதான போன்டிஃப், அவரது வயிற்றுச் சுவரில் இருந்த குடலிறக்கத்தைச் சரிசெய்வதற்கான மூன்று மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, எந்தச் சிக்கலும் இல்லாமல் மருத்துவமனையில் இருந்து பணியைத் தொடங்கினார். 

இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை வாடிகனுக்கு அழைத்துச் செல்லவிருந்த வாகனத்திற்குச் செல்லும் அவரது குறுகிய நடைப்பயணத்தில் மெய்க்காவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது.

மூன்று மாதங்களுக்கு முன்பு, மார்ச் மாதம், கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே மருத்துவமனையில், அவர் 2021 இல் பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்து 10 நாட்களுக்குப் பிறகு வெளியேறியிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.


No comments