தொடரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 53வது கூட்டத்தொடர்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று இடம்பெறுகிறது.

நேற்று ஆரம்பமான இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 14ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் முதலாவது அமர்வின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டேர்க் இலங்கை தொடர்பான தமது கருத்தை முன்வைத்தார்.

இதன்படி, இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த தசாப்த காலத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த பலர் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகள் அதனை அமுல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நிராகரிப்பதாக தெரிவித்துள்ள போதிலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆணைக்குழு தொடர்ந்தும் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுவதன் மூலம் மட்டுமே மனித உரிமைகளை மேம்படுத்த முடியும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டேர்க் தெரிவித்துள்ளார்.

No comments