உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மொண்டிரியல் நகரம் அறிவிப்பு


கனடாவில் காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மொண்டிரியல் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் உலகளவில் காற்றின் தரம் குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மொண்டிரியல் நகரில் உலகிலேயே மிக மோசமான அளவில் காற்று மாசுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, கனடாவில் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments