இராணுவச் சிப்பாய் படுகொலை!
முன்னாள் இராணுவச் சிப்பாய் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மீரிகமை பிரதேசத்தில் இன்று (27) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
53 வயதுடைய எஸ்.ஆர்.அனுருத்த என்ற குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காணி விவகாரம் தொடர்பில் அயல்வீட்டாருடன் இடம்பெற்ற மோதலின் போது குறித்த நபர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அயல்வீட்டில் வசிக்கும் இருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment