உக்ரைனில்காயமடைந்த செச்சென் படைகளின் மூத்த தளபதி!


உக்ரைனில் போரிடும் ரஷ்யாவின் செச்சென் படைகளின் மூத்த தளபதி ஒருவர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் தொலைக்காட்சி சேனல் Zvezda இன்று புதனன்று, ஸ்டேட் டுமா நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செய்தி சேவையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 

ஸ்டேட் டுமாவின் உறுப்பினராகவும், ரஷ்ய தேசிய காவலரின் செச்சென் பிரிவின் தளபதியாகவும் உள்ள ஆடம் டெலிம்கானோவ், செச்சென் குடியரசுத் தலைவர் ரம்ஜான் கதிரோவுக்குப் பின்னால் காகசியன் பிராந்தியத்தின் இரண்டாவது மூத்த அதிகாரியாக பரவலாக அறியப்பட்டவர்.

ஆடம் டெலிம்கானோவ் உக்ரைனில் இல்லை என்றும் அவர் செச்சன்யாவில் இருக்கிறார். உக்ரைனில் அவர் உயிரிழந்துள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்றும் மற்றொரு செச்சென் தளபதி கூறியதாக மேற்கோள் காட்டியது.

டெலிம்கானோவ் ஒரு முன்னாள் செச்சென் பிரிவினைவாதி மாஸ்கோவிற்குப் பக்கம் மாறினார். அவர் பிராந்தியத்தின் தற்போதைய தலைமையுடன் சேர்ந்து, உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ பிரச்சாரத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். மோதலின் ஆரம்ப நாட்களில் மரியுபோலில் செச்சென் படைகளுக்கு கட்டளையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments