மனைவி வருவாரா?:தெரியாது-சஜித்!சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.

தனது குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபடவில்லை என்று அவர் கூறுகிறார்.

தனது மனைவி அரசியலுக்கு வருவதாக வெளியான தகவலை மறுப்பதாகவும், தனது மனைவி அரசியலுக்கு வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிடுகையில், அவர் ஒரு தீவிரமான சமூக ஆர்வலராக மட்டுமே பணியாற்றுவதாக தெரிவித்திருந்தார்.

No comments