சிவகுமரன் நினைவேந்தல் யாரிடம்?
தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலின் போது அரசியல் கட்சிகள் எவ்வித அரசியல் பேதமுமின்றி பங்கேற்க வேண்டுமென ஈபிடிபி ஆதரவு நினைவேந்தல் குழு அழைப்பு விடுத்துள்ளது.
தியாகி பொன் சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் யூன் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பான ஊடக சந்திப்பு நினைவேந்தல் குழுவினரால் இன்று நடாத்தப்பட்டது.
நினைவேந்தல் மேலும் கருத்து தெரிவிக்கும்போது, தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் திங்கட்கிழமை(05) யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நினைவேந்தலில் அரசியல் கட்சிகள் அரசியல் பேதமின்றி பங்கேற்க வேண்டும். மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தல் இடத்திற்கு வந்து அஞ்சலியை மேற்கொள்ள வேண்டும் – என்றனர்.
பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி 1974 யூன் 5ம் திகதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment