ஊடக அடக்குமுறையாம்: அலறும் தெற்கு!ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதால் உடனடியாக தலையிடுமாறு மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரஜைகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையான கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றுள்ளதால் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் சட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி தலையீட்டை நாட வேண்டும் என மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தெரிவித்துள்ளார்.

“மக்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதற்கான ஒரே வழி ஊடகம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க ஹிட்லர், முசோலினி அல்லது போல்போட் போன்றவராக இருக்க விரும்புகிறாரா என நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

“ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பொதுவான கொள்கையை கடைப்பிடிக்கிறது. சர்வாதிகாரிகளை என்றென்றும் ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்தனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments