வீரமாகாளிக்கு வந்த சோதனை!யாழ்ப்பாணம் அருள்மிகு வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை இலங்கை காவல்துறை பாதுகாப்புடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

அதேவேளை ஆலய உற்சவத்தினை குழப்ப முற்படுபவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்றைய தினம்(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. 

இந் நிலையில் வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது,

யாழ்.குடாநாட்டில் பல ஆலயங்களது வழிபாட்டிட பிரச்சினைகள் நீதிமன்ற மற்றும் காவல்நிலைய படியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments