கனடா குகா யார் பக்கம்?

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனக்கு பின்னராக பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி முக்கியஸ்தரை கைவிட்டுள்ளார்.

தனது பிரத்தியேக இணைப்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்தில் தமது கடமைகளை முன்கொண்டு செல்வதற்காகவும் கடந்த ஐந்தாம் திகதி தொடக்கம் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் முன்னாள் நகர பிதா என்.இராசநாயகம் என்பவரை நியமித்துள்ளார்.

அதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், திருகோணமலை மாவட்ட அரச அதிபருக்கும் சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

சம்பந்தன் உடல் நிலை காரணமாக தற்போது கொழும்பில் தங்கியுள்ளதால் அவரின் கடமைகளை கனடா நாட்டிலிருந்து தாயகம் திரும்பியிருந்த குகதாசன் மேற்கொண்டிருந்தார்.

ஆனால் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் தெரிவில் சம்பந்தனால் முன்மொழியப்பட்ட வேட்பாளர் பெயர்களை குகதாசன் நிராகரித்திருந்தார். எம்.ஏ.சுமந்திரனின் வழிநடத்தலின் படி குகதாசன் செயற்பட்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது.

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் திருகோணமலை உள்ளூராட்சிசபை வேட்பாளர் தெரிவு சம்பந்தமாக ஒரு குழுவை அமைத்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு கோரியிருந்தார்.

இந்த நிலையில் புதிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை அண்மையில் சுமந்திரன் - குகதாசன் தரப்பினர் சந்தித்திருந்தமையினையடுத்தே ஆள் மாற்றம் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.


No comments