இலங்கையில் பிளாஸ்டிக்கை உண்ணும் யானைகள்

அம்பாறையில் காட்டு யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கழிவுகளைக் கொட்டும் இடத்தில் அசுத்தமான

பிளாஸ்டிக் கழிவுகளை யானைகள் உட்கொள்கின்றன. இதனால் யானைகள் மற்றும் மான்கள் பலியாகிவருகின்றன எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத. 

இதனையடுத்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் புதிய சட்டத்திற்கு முன்னதாக, நாடு தழுவிய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் திட்டத்தை இலங்கை ஆரம்பிக்கவுள்ளது.



No comments