பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு


பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் ஆனது நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கிய மாதிரி டெங்கு ஒழிப்பு சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments