கொழும்பு – அவிசாவளை வீதியில் விபத்து-22 பேர் காயம்!
கொழும்பு–அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்துஇன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் நவகமுவ மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment