குடியேறிகளைக் கைது செய்தால் வெகுமதியாக காவல்துறையினருக்கு கூடுதல் விடுமுறை
பிரான்ஸ் எல்லையில் குடியேறிகளைக் கைது செய்யும் காவல்துறையினருக்கு வெகுமதியாக விடுமுறை அளிகும் புதிய திட்டத்தை ஸ்பெயில் காவல்துறை அறிவித்துள்ளது.
குறிப்பாக ஸ்பெயின் - பிரான்ஸ் எல்லையில் குடியேறிகளைக் பிடித்தால் குடிவரவு காவல்துறையினருக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஸ்பெயினின் பாஸ்க் நகரமான இரூனில் உள்ள குடிவரவு மற்றும் எல்லைப் படையால் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த விடுமுறையானது குடியேறிகளைத் தடுத்து வைக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
குடியேறி ஒருவரை கைது செய்தால், மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். இரண்டு குடியேறிகளைக் கைது செய்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். மேலும் பத்து கைதுகளை எட்டியவர்களுக்கு ஐந்து நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படும்.
Post a Comment