ரணில் டெல்லிக்கு :பலாலி விஸ்தரிப்பு

 


இவ்வாண்டின் இறுதிவரை காங்கேசன்துறையிலிருந்தான கப்பல் சேவை நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள்,  கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது வரை சிறிய அளவிலான விமானங்கள் மட்டுமே பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிவருகின்றன.

எனினும் இந்திய அரசு ஓடுபாதையினை விஸ்தரிக்க உதவுவதாக கூறியிருந்த போதும் அதனை இலங்கை அரசு நிராகரித்தே வந்திருந்தது.

இந்நிலையில் தற்போது பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு முன்வந்துள்ளது.


No comments