சர்வதேச தரத்திலான சட்டமூலம்!

 


ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை மீள வழங்கக் கூடாது என்ற சரத்துக்கள் எதுவுமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும். நாட்டில் வளர்ந்த ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதற்கு தேவையான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதால் சர்வதேச தரத்திலான முறைப்படி இந்த சட்டமூலம் முன்வைக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments