முன்னணியின் மூவருக்கு அழைப்பு!

 


தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீதான மருதங்கேணி அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பில் முன்னணி உறுப்பினர்கள் மூவருக்கு இலங்கை காவல்துறையினால்; விசாணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோரை விசாரணைக்காக கிளிநொச்சி காவல்; நிலையத்திற்கு வருமாறு; அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொழும்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதேபோன்று கைதாயிருந்த ஆதரவாளர்களான செல்வராஜா உதயசிவம், சற்குணதேவி ஜெகதீஸ்வரன் ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


No comments