பொதுஜன பெரமுனவிற்கே மக்கள் ஆணை


இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றி பெறும் என்றும் அதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் ஆணையை பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுத்ததோடு மக்கள் ஆணையைக் காட்டிக்கொடுக்கும் வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம். எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments