துப்பாக்கி வெடித்ததில் காயம்!

  


கிளிநொச்சியின் பளை கோவில் வயல் பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்    ஒன்று இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

வல்லை - தொண்டமானாறு வீதியில் உள்ள வெளியில் சடலம் ஒன்று காணப்படுவதாக காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். 

சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிற நிலையில் மேலதிக விசாரணைகளை  காவல்துறை முன்னெடுத்துள்ளது.


No comments