குருந்தூர்மலையில் காவடி! குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக இலங்கை படைகளால் கட்டப்பட்டுள்ள விகாரையினை வழிபட வருகை தந்திருந்த அமைச்சரை வரவேற்க சென்றிருந்த தமிழ் பிரதிநிதிகள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.

தமிழர்களின் தொன்மை மிகுந்த காணியை அடாத்தாக பிடித்து தொல்பொருட்கள் காணப்படுவதாக தெரிவித்து பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதற்கு எதிராக நீதிமன்றில் தமிழ் தரப்புக்கள் படியேறியுள்ளன. 

இந்நிலையில் முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு நேற்றையதினம் வருகைதந்திருந்த் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பிலவை வரவேற்ற தமிழ் பிரதிநிதிகள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.

உதய கம்மன்பிலவின் வரவினை எதிர்த்து குருந்தூர்மலையில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு தலம் அமைந்த குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி விகாரை கட்டப்பட்டு தற்போது முடியும் தறுவாயில் உள்ளது.அத்தகைய செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் அரச ஆதரவு தமிழ் பிரதிநிதிகள் சிலரே உதயகம்மன்பிலவை வரவேற்றிருந்தமை உள்ளுர் மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.


No comments