யாழில் பேருந்துக்களில் தொலைபேசி திருட்டு - ஐவர் கைது


யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் , முதியவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருடும் கும்பலை சேர்ந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதானவரிடம் இருந்து  திருடப்பட்ட 9 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

அதேவேளை சந்தேக நபரால் திருடப்பட்ட தொலைபேசிகளை வாங்கிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைதானவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்,கைத்தொலைபேசி தொலைத்தவர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் உரிய முறைப்பாடுகளை காண்பித்து தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments