யாழில் 18 கடற்தொழிலாளர்கள் கைது


முறையான அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் 18 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அவர்களிடம் இருந்து, 669 கடலட்டைகள், 6 டிங்கிகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வும் கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 42 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர் 

No comments