டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள்


நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையில், பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

நாளைய தினம் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 42 ஆயிரத்து 184 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் டெங்கு அபாயப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments