பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞன் படுகாயம் ; வெடி பொருட்கள் மீட்பாம்


காலி – கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டால் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் காயமடைந்துள்ளதுடன் அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த மீகொடை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்ததுடன் இவரிடமிருந்து வெளிநாட்டு கைக்குண்டு, T56 ரக துப்பாக்கி, 105 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments