தாய் மற்றும் குழந்தைக்கு குரங்கு அம்மை !!


வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த தாய் மற்றும் குழந்தைக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து வருகை தந்த இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குரங்கு அம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது தேசிய தொற்று நோய்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதியாக 2022 நவம்பர் இல் டுபாயிலிருந்து வந்த இலங்கையர்களுக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments