உள்ளூராட்சித் தேர்தலை இனியும் ஒத்திவைக்க முடியாது
நிதி இல்லை என்ற பொய்யான அறிவிப்பை கூறி இனிமேலும் உள்ளூராட்சித் தேர்தலை இனியும் ஒத்திவைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலத்தில் அரச நிகழ்வுகளுக்கு ஒதுக்கப்பட்ட செலவீனங்கள், நிதி ஒரு பிரச்சினையாக இல்லை என்பதையே காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களை மேற்பார்வையிட நியமித்துள்ள நடவடிக்கைக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்திற்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், வாக்காளர் பதிவேடுகளைத் திருத்துவதற்கு முன்பாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment