அரசியலில் நுழையும் அனைவரும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும்


புதிய விதிமுறைகளின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், புதிய விதிகளின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமான வரிப் பதிவேடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே புரிதிய விதிகளின் படி, குறிப்பாக நாடாளுமன்றம், மாகாண சபைகள் அல்லது உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்பவர்களும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் எந்தவொரு தரப்பினருக்கும் விசேட சலுகை வழங்கப்படாது என்றும் நாட்டில் யார் வரி செலுத்த வேண்டும் என்பதை இது தீர்மானிகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments